Breaking
Sat. May 4th, 2024

சம்சங் நிறுவனம் தயாரித்துள்ள Samsun Galaxy Note 7s கையடக்க சாதனம், திடீரென தீப்பற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து உலகின் பல்வேறு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அச்சாதனத்தை மீளப் பெறுவதற்கு சம்சங் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டுள்ள குறித்த கையடக்க சாதனம், தற்போது வரை சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகளவில் விற்கப்பட்டுள்ளன.

ஆயினும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இன்று (02) அச்சாதனம் அறிமுகப்படுத்தப்படவிருந்த நிலையில், குறித்த கையடக்க சாதனம் தீப்பிடிப்பது தொடர்பில் இது வரை 35 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதனை மீளப் பெறுவதற்கு சங்சங் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

சுமார் பல மில்லியன் கையடக்க சாதனங்கள் இவ்வாறு மீளப் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சம்சங் நிறுவனம், உலகம் முழுவதிலும் பல்வேறு இடங்களிலும் இருந்து தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளைத் தொடர்ந்து அதனை ஆராய்ந்து விரிவான கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அத்துடன், எமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கில் கலக்ஸி நோட் 7 இன் விற்பனை மற்றும் அதன் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்சங் நிறுவனத்தின் மிக நெருங்கிய போட்டியாளரான அப்பிள் நிறுவனம் தனது அடுத்த வெளியீடான iPhone 7s இனை இம்மாதம் வௌியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது சம்சங் நிறுவனத்திற்கு சரிவை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சாதனம் தீப்பற்றியமை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அது தொடர்பான வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.samsung_galaxy_note_02

samsung_galaxy_note_03

samsung_galaxy_note_04

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *