பிரதான செய்திகள்

நிதியமைச்சர் மங்கள சமரவீரவுக்கு

அமைச்சரவையில் மாற்றம் செய்ய போவதாக தான் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளதால், வாக்குறுதியை நிறைவேற்றும் வரை வாராந்த அமைச்சரவைக் கூட்டங்களை ஒத்திவைக்க உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையிலேயே இது தொடர்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதும் அமைச்சரவை மாற்றத்தை மேற்கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது.

இதனிடையே அமைச்சரவை மாற்றத்தின் போது வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நிதியமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.

தற்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதற்கு இணங்கியுள்ளதாகவும் இந்த பதிலாக எந்த அமைச்சை பெற்றுக்கொள்வது என்பது குறித்த தகவலை அவர் இன்னும் வெளியிடவில்லை என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நான் மரணிக்க விரும்பவில்லை! முஸ்லிம் அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பேன்! ஞானசார

wpengine

World Islamic Conference President mythreepala Sirisena participated

wpengine

31 Counties Diplomat visited Polannurava Remote areas

wpengine