பிரதான செய்திகள்

மன்/அலாவுதீன் பாடசாலையினை திறந்து வைத்த அமைச்சர் றிஷாட்

மன்னார் பெரிய கருஸல் மன்- அலாவுதீன் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை இன்று(08)  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் கைத்தொழில் அமைச்சருமான றிசாட் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.

எஸ்.கே.பி. அலாவுதீனின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குறித்த பாடசாலையின் திறப்பு விழா பாடசாலையின் அதிபர் என்.எம்.சுஜப் தலைமையில் இடம்பெற்றது.

அமைச்சருடன் இணைந்து மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் சுகந்தி செபஸ்த்தியன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் ஆகியோர் குறித்த பாடசாலையை திறந்து வைத்துள்ளனர்.

 

மேலும் இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், உயர்மட்ட அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்ததோடு பாடசாலையில் தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையிலான கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை!

Editor

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்க இம்சை

wpengine

ஞானசார தேரரை அடக்க முடியாத 21பாராளுமன்ற உறுப்பினர்கள்

wpengine