Breaking
Mon. May 20th, 2024

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)

மன்னாரிலுள்ள தள்ளாடி இராணுவ முகாமுக்கு அண்மையில் உள்ள ஒரு சிறிய நீரோடையில் நூற்றுக் கணக்கான பெரிய இனக்கொக்குகள் சுதந்திரமாக உலாவருகின்றன.மன்னார் அனுராதபுர வீதியில் பயனிப்போரும்,சுற்றுலாப் பயணிகளும் தமது வாகனங்களை நிறுத்தி அழகை அள்ளிப்பருகுகின்றனர்.


இவ்வரிய பறவைகள் பருவகால இடப்பெயர்ச்சி மூலம் வருகை தந்தவையாகவும் இருக்கலாம்.இவற்றைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எமக்கும் உண்டு.

மன்னார் கச்சேரிக்கு முன்னால் செல்லும் வீதியோரங்களில் உள்ள மரங்களில் சாதாரண வெண்ணிறக் கொக்குகள் குடும்பம் குடும்பமாக கூடுகட்டி வாழ்கின்றன.இம்மரங்களின் இலைகள் வெண்ணிறமாகக் காட்சி தருகின்றன.இம்மரங்களின் கீழ் வாகனங்களை நிறுத்தவோ பாதசாரிகள் ஓய்வு எடுக்கவோ முடியாதுள்ளது.

117fd345-3587-44f0-a2ad-4920948b33db
இம்மாவட்டத்தில் பறவைகளுக்காக ஒதுக்கப்பட்ட பல இடங்கள் இருந்தும் சனசந்தடிமிக்க மன்னார் நகர்ப்பிரதேசத்தை பறவைகள் தெரிவு செய்ததன் மர்மம் புரியாதுள்ளது.இப்பறவைகளை புகலரன்களை நோக்கி நகர்த்த வேண்டிய பொறுப்பு வனஜீவராசிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்குரியதாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *