தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

டுவிட்டரில் புதிய வசதி!

பதில் பதிவுகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது ட்விட்டர். இந்தப் புதிய வசதி ட்விட்டர் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

2006ஆம் ஆண்டு ட்விட்டர் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அலைபேசியில் அனுப்பப்படும் செய்திகளுக்கான எழுத்துக்களின் எண்ணிக்கை 140ஆக இருந்தது. இதனால், ட்விட்டரும் அதையே தொடரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

எனினும் ஃபேஸ்புக்கில் நீண்ட கட்டுரைகளைக் கூட எழுத முடிவதால், விஸ்தாரமான பதிவுகளை நாடும் பயனாளர்கள் ட்விட்டரைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

இதைக் கருத்திற்கொண்டு, ஒவ்வொரு பதிவுக்குமான எழுத்துக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாக ட்விட்டர் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. அதன் முதற்கட்டமாக, பதில் பதிவுகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

இதன்படி, தொடர்ந்தும் 140 எழுத்துக்களுக்கு மட்டுமே இடம் இருந்தாலும் கூட, பதில் பதிவுகளின்போது குறித்த ட்விட்டராட்டியின் பெயருக்காக எடுத்துக்கொள்ளப்படும் இடம், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இதனால், அதற்காக எடுத்துக்கொள்ளப்படும் இடத்தை ட்வீட்டுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று ட்விட்டர் அறிவித்துள்ளது.

Related posts

ஆட்டிடம் அனுமதி பெற்றே பின்னரே ஆட்டுடன் உடலுறவு

wpengine

கடலுணவின் பொருளாதார கேந்திர வலயமாக மன்னார் மாவட்டம்!

Editor

அஸ்வெசும இரண்டாம் கட்டம் – தகுதி பெற்றவர்களின் பட்டியல் வௌியீடு.

Maash