பிரதான செய்திகள்

மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான கூட்டம்.

(எஸ்.என்.எஸ்.றிஸ்லி சம்சாட்)

மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான 02வது கூட்டம் அம்பாறை மாவட்ட இணையத்தின் தவிசாளர் திரு.வ. பரமசிங்கம் அவர்களின் தலைமையில் 28.02.2017ம் திகதியான இன்று அக்கரைப்பற்று இணைய மண்டபத்தில் இடம்பெற்றது.

‘தூய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில் ஒன்றிணைந்து செயற்படுவோம்’ எனும் தொணிப்பொருளில் அமைந்த இம்மாவட்ட மட்ட கலந்துரையாடலில் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ரோகண அவர்களும், SLCDF அமைப்பின் திட்டப் பொறுப்பாளர் திரு.ஏ.சொர்ணலிங்கம் அவர்களும், அதே போன்று இணையத்தின் அங்கத்துவ அமைப்புக்கள் மற்றும் ஏனைய அரசசார்பற்ற அமைப்புக்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் இணைந்து இந்நிகழ்வை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் மாவட்ட மட்ட கூட்டம் எதிர்வரும் 09.03.2017 ஆம் திகதி நடைபெறும் எனவும் அரிவிக்கப்பட்டது. மேலும் மார்ச் 12 இயக்கத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான மாநாட்டினை அக்கரைப்பற்றில் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இவ் மார்ச் 12 இயக்கத்தின் செயற்திட்டமானது மார்ச் மாதம் 13ஆம் திகதி கொழும்பில் இருந்து  வாகனப் பேரணியாக ஆரம்பபித்து நாடு பூராகவும் முன்னெடுத்துச் செள்ளப்பட்டு மீண்டும் கொழும்பை வந்தடையவுள்ளதாக அதன் செயற்பாட்டாளர் குறிப்பிட்டார்.

Related posts

பழைய தகவல்களை பேஸ்புக் தரும் புதிய வசதிகள்

wpengine

சுவிஸில் இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து “புளொட்” அமைப்பின் மேதின ஊர்வலம் (படங்கள் இணைப்பு)

wpengine

கரோலின் ஜூரி மற்றும் மாடல் அழகி சூலா பத்மேந்திரா ஆகியோருக்கு பிணை

wpengine