மட்டக்களப்பு, ரிதிதென்னையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் “மட்டக்களப்பு கெம்பஸ்” வளாகத்தில் இரண்டாயிரம் மரங்களை நடும் வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு கெம்பஸ் தலைவரும், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆரம்பித்து வைத்தார்.
இரண்டாயிரம் மரம் நடும் திட்டத்தின் முதலாவது மரத்தினை கடந்த ஞாயிற்றுக்கிழமை இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நட்டி வைத்தார்.
மட்டக்களப்பு, ரிதிதென்னையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மட்டக்களப்பு கெம்பஸ் வளாகத்தில் சுத்தமான – சுகாதாரமான இயற்கை காற்றை சுவாசிப்பதற்கும் ; வாழ்வதற்காகவும் இவ்வாறு இரண்டாயிரம் மரங்கள் நடப்படவுள்ளன.
மரங்களை நடுவதற்காக tree spade இயந்திரம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மரங்களை சேதமின்றி பிடுங்கி இன்னோரு இடத்தில் நடுவதற்கு பயன்படுத்தப்படும் இவ்வியந்திரம், இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.