Breaking
Fri. May 17th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

2017-02-11ம் திகதி மிகவும் பர பரப்பான சூழ் நிலைகளுக்கு மத்தியில் மு.காவின் கட்டாய உயர்பீடக் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தது.பலராரும் எதிர்பார்க்கப்பட்ட சர்ச்சைக்குரிய செயலாளர் தொடர்பான கதை வருகிறது.

 

அமைச்சர் ஹக்கீம்: செயலாளர் அரசியல் பதவிகள் வகிக்க முடியாது.எனக்கு விருப்பமானவர் செயலாளராக நியமிக்கப்பட வேண்டும்.அப்போது தான் எனக்கு வேலை செய்து கொள்வது இலகு.செயலாளரை தெரிவு செய்து கொள்ளும் அதிகாரத்தை என்னிடம் தாருங்கள்.அவர் மீது ஏதேனும் பிழைகள் இருப்பின் அவரை நீக்கும் அதிகாரம் உயர்பீடத்திற்கு உண்டு.

 

(தனக்கு விருப்பமானவர்,தனது வேலைகளை இலகுவாக்க நியமிப்பவர் செயலாளர் அல்ல.அவர் குறித்த நபரின்  பிரத்தியேக உதவியாளர்/செயலாளர் என்றே அழைக்கப்படுவார்.இந்த இடத்தில் ஹக்கீம் தலைவராக செயற்படுவது பொருத்தமற்றது.அவரைக் கூட தலைவராக உயர்பீடமே தெரிவு செய்ய வேண்டும்.இப்படி இருக்கையில் செயலாளர் பதவியை தான் நியமிப்பதாக அமைச்சர் ஹக்கீம் கையில் எடுக்க முடியுமா?)

 

மா.ச.உ ஜவாத் : அப்படியானால் செயலாளரையும் நீக்களே வைத்துக் கொள்ளுங்கள் (ஒரு கட்சியின் தலைவராகவும்,செயலாளராகவும் அமைச்சர் ஹக்கீம் இருப்பது பலத்த விமர்சனங்களை தோற்றுவித்து விடலாம்.) அல்லது செயலாளர் பதவி தான் அதிகாரமிகதென்றால் நீங்கள் செயலாளராக இரியுங்கள்.தலைமைத்துவத்தை இன்னுமொருவருக்கு வழங்குங்கள்.

 

நிஸாம் காரியப்பர்: மிகப் பெரும் கட்சியான ஐ.தே.கவில் அக் கட்சியின் தலைவரே தனது கட்சியின் செயலாளரை தெரிவு செய்துள்ளார்.இன்று கபீர் காசீம் ரணிலின் விருப்பத்திற்கு அமையவே செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த கட்சியால் செய்ய முடியுமென்றால் ஏன் எம்மால் முடியாது?

 

(மு.கா ஐ.தே.கவின் முன் மாதிரியை கொண்டு இயங்கும் கட்சியா அல்லது குர்ஆன் ஹதீதின் வழி காட்டலை முன் மாதிரியாக கொண்டு இயங்கும் கட்சியா?)

 

பா.உ  மன்சூர்: நாங்கள் எப்போதும் உங்களுக்கு கட்டுப்படுபவர்கள்.செயலாளரை தெரிவு செய்தல்,விலக்குதல் போன்ற அனைத்து அதிகாரங்களையும் நீங்களே வைத்து கொள்ளுங்கள்.

 

(அப்படியானால் உயர் பீடத்தின் செயற்பாடென்ன?)

 

முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி: நீங்கள் பேசுவதை வைத்து பார்க்கும் போது என்னை வெளியே போடுவதற்கான முயற்சியாக தோன்றுகிறது.பிரச்சினை இல்லை.என்னை வெளியே போட வேண்டும் என்றால் அனைவரும் சேர்ந்து மஷூரா செய்து வெளியே போடுங்கள்.சுத்தி வளைத்து வருவது சரியில்லை.இது கிழக்கை தளமாக கொண்ட ஒரு முஸ்லிம் கட்சி.இதன் தலைமைத்துவம் கிழக்கிற்கு வெளியே இருந்தால், கிழக்கில் உள்ள ஒருவர் செயலாளராக  இருக்க வேண்டும்.மேலும்,அவர் அரசியல் பதவி வகிக்க கூடியவராக இருக்க வேண்டும்.இக் கட்சிக்கு பலம் பொருந்திய அரசியல் அதிகாரங்கள் கிடைக்கும் போது அது அவருக்கு வழங்கக் கூடிய நிலை இருக்க வேண்டும் (மு.காவின் ஸ்தாபாகத் தலைவருக்கு அதிகாரமற்ற  ஒரு செயலாளர் பதவியை உருவாக்க தெரியாதா? செயலாளர் என்பது ஒரு கட்சியின் தலைவருக்கு அடுத்த அந்தஸ்தில் உள்ள பதவி என்பதால் அவர் மிகவும் பலமானவராக இருப்பார்.அவர் அரசியல் அதிகாரங்களை கொண்டிருக்காவிட்டால் எப்படி?).ஒரு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள் அதிகாரமிக்கவை.

 

அமைச்சர் ஹக்கீம்: நீங்கள் இரண்டு அதிகார மையத்தை கிழக்கில் உருவாக்க சிந்திக்கின்றீர்கள்.கடந்த மாகாண சபை தேர்தலின் போது திடீரென ஒழித்துக் கொண்டீர்கள்

 

(கடந்த மாகாண சபைத் தேர்தலின்  போது வெற்றிலைச் சின்னத்தில் தேர்தல் கேட்கவே அமைச்சர் ஹக்கீம் விருப்பம் கொண்டிருந்தார்.அதற்கான  கையொப்பத்தை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்திலேயே ஹசனலி ஓடி ஒழித்ததாக அந் நேரத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்டிருந்தது.இதன் பின்னர் முன்னாள் செயலாளர் நாயகம் ஹசனலி பல்வேறான அழுத்தங்களை வழங்கியே தனித்து தேர்தல் கேட்கச் செய்தார்.அதனால் தான் இன்று மு.கா மிகப் பெரும் பேரம் பேசும் சக்தியை பெற்றுக் கொண்டதோடு நஸீர் ஹாபிஸ் முதலமைச்சராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.).

 

அமைச்சர் ஹக்கீம் தனது விருப்பத்திற்கமைய மன்சூர் ஏ.காதரை செயலாளராக தெரிவு செய்கிறார்.இறுதியில் தவிசாளர் பதவியை ஏற்குமாறு அவர் வற்புறுத்தப்படுகிறார்.ஹசனலி உயர்பீடத்திலிருந்து வெளியேறிச் செல்கிறார்.அவரோடு இன்னும் பலரும் வெளியேறிச் செல்கின்றனர்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *