(பழுலுல்லாஹ் பர்ஹான் )
தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள வெலிகம அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தென் மாகாண இளைஞர்களுக்கான இஸ்லாமிய மாநாடு ஒன்று அண்மையில் வெலிகம ஜாமிஉல் இஹ்ஸான் ஜும்மாப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
வெலிகம அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஓ.பத்ஹூர் ரஹ்மான் பஹ்ஜி தலைமையில் இடம்பெற்ற மேற்படி மாநாட்டில் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் டப்ளியூ-தீனுல் ஹஸன் பஹ்ஜி ”முன்மாதிரி முஸ்லிம் வாலிபன்” எனும் தலைப்பிலும் மருதமுனை தாறுல் ஹூதா அரபுக் கல்லூரியின் பணிப்பாளர் கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.முபாரக் மதனி ” இஸ்லாமிய இளைஞர்கள் எதிர்நோக்கும் சவால்கள்” எனும் தலைப்பிலும் விஷேட சொற்பொழிவாற்றினர்.
மேற்படி மாநாட்டில் தென்மாகாணத்தைச் சேர்ந்த சுமார் 250க்கும் மேற்பட்ட முஸ்லிம் வாலிபர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த அல்-இஹ்ஸான் நலன்புரிச் சங்கமானது சமூக சேவைகளில் மட்டுமல்லாது ஆன்மீகத் துறையிலும் பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.