Breaking
Wed. May 22nd, 2024

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் குரலை நசுக்குவதற்காகவும் அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்டி சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அடிமைச் சமூகமாக வைத்திருக்கலாம் என இனவாத சக்திகள் எண்ணுவதையிட்டு மனவேதனை அளிக்கின்றது என வவுனியா நகர சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம் லரீப் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தற்போதைய சூழ்நிலையில் சிறுபான்மை சமூகமாகிய முஸ்லிம்களுக்காக இந்நாட்டின் உயரிய சபையான நாடாளுமன்றத்திலும் சரி அமைச்சரவையிலும் உரத்து குரல் கொடுத்து உரிமைகளை பெற்றுக் கொள்ள முயலுகின்ற சாதனையாளன் ரிஷாட் பதியுதீன் அவர்களின் குரல்களை நசுக்குவதற்கு முனைகின்றனர்.

தொடர்ச்சியாக திட்டமிட்டு பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர்.

இதற்கென இனவாத குழுக்கள் ஒற்றுபட்டு முனைப்புடன் செயற்படுவது மிகவும் வேதனையாகவுள்ளது. சிறுபான்மை மக்களின் துன்பகரமான வாழ்க்கையை வலிகளை நன்குணர்ந்த ரிஷாட் பதியுதீனின் வாழ்வை மேம்படுத்துவதற்காவும் உரிமைகளை வென்று எடுப்பதற்காவும் அரசியலில் கால்வைத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

காழ்ப்புணர்ச்சி, பொறாமையும் கொண்ட இனவாத சக்திகள் அவரை அவ்வப்போது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி அதனை நிரூபிக்க முடியாத நிலையில் அண்மையில் நடைபெற்ற முஸ்லிம் பெயர் தாங்கிய நாசகாரக் கும்பல்களின் மிலேச்சத்தனமான செயற்பாட்டை வைத்துக்கொண்டு இந்நாட்டிற்கு விசுவாசமாகவும் அர்ப்பணிப்புடனும் அந்நிய செலவாணியினை அதிகமாக பெற்றுக்கொடுப்பதற்கு இரவு பகலாக செயற்படுகின்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனை பழி தீர்ப்பதற்காக மொட்டைத்தலைக்கும் முழங்காளுக்கும் முடிச்சுப்போடுவது போன்று சூழ்ச்சி செய்கின்றனர்.

அமைச்சர் குற்றம் செய்தால் அவரை நீதியின் முன் நிறுத்தி நிரூபிக்காமல் அதற்கு திராணியற்றவர்கள் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காகவும் சிறுபான்மை சமூகத்தை அடிமையாக்குவதற்கும் தங்களது பொய்ப் பரப்புரைகளை கட்டவிழ்த்து ஆடுகின்றனர்.

அவர்களின் சதி முயற்சி இறைவனின் உதவியினால் தோல்வியே அவர்களுக்கு முடிவாகும் என்றார்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *