வடக்கு முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் கடந்த தினத்தில் தெரிவித்திருந்த கருத்துக்கு எதிராக அவரை உடனடியாக கைது செய்யுமாறு கோரி சிங்கலே தேசிய முன்னணி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்தனர்.
வடமாகாண முதலமைச்சர் அரசியலமைப்பினை மீறும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக
அந்த முன்னணியின் தலைவர் வணக்கத்துக்குரிய அகுலுகல்லே சிறிஜினாநந்த தேரர் எமது
தெரிவித்திருந்தார்.
இதேவேளை ,இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிட்சர்லாந்தின் நீதி அமைச்சர் சிமோனிற்றா சோமறுகா, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை யாழ்ப்பாணத்தில் வைத்து சந்தித்தார்.
சுவிட்சர்லாந்தில் இருந்து ஈழ அகதிகளை நாடுகடத்துவது தொடர்பிலேயே தமது விஜயத்தில் முக்கியத்துவம் வழங்கவிருப்பதாக, சுவிட்சர்லாந்தின் நீதி அமைச்சர் சிமோனிற்றா சோமறுகா
தெரிவித்துள்ளார்.
அவரது ஊடக அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது அரசியல் சூழ்நிலைகள் சீராக உள்ள நிலையில், இதற்கான நடவடிக்கையை தமது அரசாங்கம்
எடுக்கவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.