Breaking
Sun. Nov 24th, 2024

பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட தினத்தன்று, கொலைக்கு முன்பாகவோ அல்லது பின்னரோ சந்தேக நபர்கள் எவருக்கேனும் தொலைபேசி அழைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என குற்றப் புலனயவுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இந்த படுகொலை விவகாரத்தில் ஏற்கனவே முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க, நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் குற்றவியல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சுமித் பெரேரா ஆகியோர் கைதாகியுள்ள நிலையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைவாகவே இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணைக்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஏற்கனவே இது தொடர்பில் செய்த விசாரணைகளில், கொலை இடம்பெற்ற தினத்தன்று ஜனாதிபதி செயலகத்திலிருந்து நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த டேனியல் பெரேராவின் கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்புக்கள் பல மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்தது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளில் குறித்த ஜனாதிபதி செயலக தொலைபேசிகள் அம்பாந்தோட்டை கால்டன் இல்லத்துடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளமை உறுதியானது.

எனினும் வஸீமின் கொலை இடம்பெற்ற தினத்தன்று மேற்கொளப்பட்ட அழைப்பு விபரங்கள் ஜனாதிபதி  செயலக தொலைபேசி பதிவு கணினியில் இருந்து நீக்கப்பட்டிருந்தன. இந் நிலையிலேயே இந்த விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி ஜனாதிபதி செயலகத்தின் குறித்த கணினியை தமது பொறுப்பில் எடுத்துள்ள புலனாய்வுப் பிரிவு அழிந்த தகவல்களை மீளப் பெற்று வருகின்றது.

சம்பவம் தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, சிரேச்ட  பொலிஸ் அத்தியட்சர் சுதத் நாகஹமுல்ல ஆகியோரின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சீ.டபிளியூ. விக்ரமசேகர, பிரதான பொலிஸ் பரிசோதகர் ரவீந்த்ர விமலசிறி ஆகியோரின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *