(அனா)
சர்வதேச தென்னை தினம் – 2016 முன்னிட்டு நாடலாவிய ரீதியில் இருபத்தைந்து லட்சம் தென்னை மரங்களை நடும் திட்டம் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் வழிகாட்டலில் தென்னை பயிர்ச் செய்கை சபையினால் நாடலாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தென்னை உற்பத்தியாளர்களுக்கு தென்னங்கன்றுகளை வினியோகிக்கும் நிகழ்வும் தென்னை பயிர் செய்கையாளர்களுக்கு உரமானியம் வழங்கும் பிரதான நிகழ்வு இன்று (02.09.2016) கோறளைப்பற்று மத்தி பிரதேச செயல கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர் கமால் சப்ரி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அபிலிருத்தி பிரதி அமைச்சரி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டதுடன் அதிதிகளாக தென்னை பயிர் செய்கை சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் திருமதி பி.ரவிராஜ், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வீட்டுத்தோட்ட தென்னங்கன்று வளர்ப்பாளர்கள் இருநூற்றி ஐம்பது (250) பேருக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டதுடன் இருபந்தைந்து பேருக்கு தென்னை உரமானியமாக காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.