Breaking
Sun. Nov 24th, 2024

பல ஆயிரம் மைல்கள் தூரத்திலிருந்தவர்களை நண்பர்களாக மாற்றியதுடன் மட்டுமில்லாமல் ஒரு குழந்தையின் உயிரையும் காப்பாற்ற காரணமாக இருந்துள்ளது பேஸ்புக்.  ஆப்கானை சேர்ந்த தம்பதிகள் பாகிஸ்தானின் பெஷாவரில் வசித்து வந்துள்ளனர். இவர்களின் 14 மாத குழந்தை ஏஹியாவுக்கு இருதயத்தில் ஏற்பட்ட ஓட்டையினால் மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் பெஷாவர் மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்தனர். ஏஹியாவின் மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனை நிர்ணயித்த பணம் இல்லாமல் பெற்றோர்கள் தவித்து வந்தனர். இந்தச் சூழ்நிலையில்தான் அந்த இரு மனிதாபிமான கைகள் ஒன்றாக இணைந்தது.

ஏஹியாவின் பெற்றோரின் உறவினரான ஜாகீர் (29) ஆப்கானில் வசித்து வருகிறார். ஆங்கில ஆசிரியரான ஜாகீர் சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படக் கூடியவர்.  குழந்தையின் நிலையை கேள்வியுற்று சமூக வலைதளங்கள் மூலம் அக்குழந்தைக்கான மருத்துவ செலவுக்கு நிதி திரட்டும் முயற்சியில் இறங்கினார் ஜாகீர். அதன் முதல்படியாக தனக்கு 2012 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் தனது நட்பு வட்டாரத்தில் இணைந்த இஸ்ரேலை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அதிகாரி மாஸ்மான் (69) நினைவு வந்தது ஜாகீருக்கு. உடனே பேஸ்புக் மூலம் மஸ்மானிற்கு ஒரு குறுஞ்செய்தி ஒன்றை ஏஹியாவின் புகைப்படத்துடன் அனுப்பி வைத்தார் ஜாகீர்.

அந்த குறுஞ்செய்தியில் “அன்பிற்குறிய மஸ்தான் அவர்களுக்கு நீங்கள் காணும் இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தையின் பெயர் ஏஹியா. என்னுடைய உறவினரின் குழந்தையான ஏஹியாவுக்கு இருதயத்தில் ஏற்பட்ட ஓட்டையினால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. குழந்தையின் மருத்துவ வசதிக்கு போதிய பணம் இல்லாததால் ஏஹியாவின் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். உங்களால் இயன்றால் உதவி செய்யுங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார் ஜாகீர்.

ஜாகீரின் குறுஞ்செய்தியை பார்த்த மஸ்தான் அடுத்த சில மணி நேரத்தில் ஜாகீருக்கு பதில் செய்தி அனுப்பியுள்ளார். அதில், வளர்ந்து வரும் நாடுகளின் குழந்தைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்கென ஒரு தொண்டு நிறுவனம் மூலம் மருத்துவ அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலம் ஏஹியாவின் இதயத்திலுள்ள ஓட்டையை அடைப்பதற்கான மருத்துவ சிகிச்சைகள் செய்யலாம் என்று கூறியுள்ளார் மஸ்தான். அதன்பின் அந்த தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ஏஹியாவுக்கான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தி முடிந்திருக்கின்றனர் ஏஹியாவின் குடும்பத்தினர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *