Breaking
Fri. May 3rd, 2024

(ஜெமீல் அகமட்)

தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் அதற்காக வட கிழக்கு இணைக்கப்பட வேண்டும் என அமைச்சர் ஹக்கீம் கூறுவதாக பல ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்த கருத்தை கூற ஹக்கீமுக்கு வட கிழக்கில் எந்த உரிமையும் இல்லை அதாவது அவர் இன்று பாராளுமன்றத்தில் இருப்பது கண்டி மாவட்ட மக்களின் வாக்குகளால் அதனால் மத்திய மாகாணத்தை பற்றி பேசலாமே தவிர வட கிழக்கு மக்கள் வாக்கு அளிக்காத மக்கள்  பிரதிநிதி வட கிழக்கை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை.

ஒரு முஸ்லிம் என்ற சொல்லை வைத்து இருக்கும் கட்சியின் தலைவர் என்றால் தான் கூறுவதை சமுகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கருத முடியாது. இன்று மக்களால் ஓரங்கட்டப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் மட்டும் தொங்கிக் கொண்டு இருக்கும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சமுதாயத்தை பற்றி பேச முடியாது. பேசும் நிலைமை மறைந்த  தலைவரோடு போய் விட்டது இன்று முஸ்லிம் காங்கிரஸ் செய்யும் அரசியல் பணம் பதவி என்பது மக்களுக்கு தெரியும் அதனால் மாற்று இன தலைவரின் கதையை வட கிழக்கு முஸ்லிம் மக்கள் ஆதரித்தாலும் ஹக்கீம் அவர்களின் கதையை மக்கள் கேக்கும் சூழ் நிலை இப்போது இல்லை. தனது கட்சிக்குள் நடக்கும் பதவி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் போது சமுகத்தின் பிரச்சினைக்கு தீர்க்க நினைப்பது வேடிக்கை  அது மக்களை ஏமாற்றும் வேஷம் என்று தான் கூற வேண்டும்.

வட கிழக்கு என்பது வடக்கில் அதிகமாக சகோதார தமிழ் மக்களும் கிழக்கில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்வதால் முஸ்லிம்கள் விடயமாக கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் புத்திஜிவிகள் பொதுமக்கள் ஒன்றினைந்து முடிவு செய்ய வேண்டும் அதற்காக தமிழ் மக்கள் வட கிழக்கு இணைப்பு சம்மந்தமாக ஹக்கீமுடன் பேசாமல் வட கிழக்கு மக்களுடன் பேச வேண்டும் அப்போது தான் ஒரு தீர்க்கமான முடிவு வரும்.

ஆனால் வட கிழக்கு மாகாணம் இணைய கூடாது என்று கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் புத்திஜிவிகள் விரும்புகின்றனர். அதனால் ஹக்கீம் கூறும் எந்த கருத்தையும் மக்கள் ஏற்றுக் கொள்ள அவர் நபி பராம்பரையும்  அல்ல.

அதனால் வடகிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமே அரசாங்கத்திடம் மக்களின் கருத்தை கூற முடியும் அந்த வகையில் வடக்கில் பிறந்த மகன் இன்று நாட்டில் உள்ள முஸ்லிம்கள் விரும்பும் தேசிய தலைவர் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு கருத்து கூறும் உரிமை இருக்கிறது அவரது கருத்தை முஸ்லிம் சமுகம் ஏற்றுக் கொள்ளும் காரணம் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களுக்கு பிறகு சமுதாயத்துக்காகவும் ஏனைய மக்களின் நலனுக்காகவும் துணிந்து குரல் கொடுத்து சிறந்த சேவை செய்து வருகிறார் அதனால் இன்று முஸ்லிம்கள் தேசிய தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளனர் அதிலும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் அம்பாறை மாவட்டத்தில் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு மக்கள் ஆதரவு பெருகிவருகிறது கடந்த தேர்தலில் அந்த மக்கள் மயில் சின்த்துக்கு 33000 வாக்கு அளித்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே இன்று வட கிழக்கில் பல முஸ்லிம் கட்சி இருக்கிறது அதில் உள்ள தலைவர்களில் மக்கள் விரும்பும் தலைவர் யார் என்று தேடிப்பார்த்தால் அது அமைச்சர் றிசாத் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை அதனால் வட கிழக்கு விடயத்தில் வட கிழக்கு அரசியல்வாதிகள் புத்திஜிவிகள் பொது அமைப்புக்கள் எல்லோரும் அமைச்சர் றிசாத் அவர்களின் தலைமையில் ஒன்றினைந்து வட கிழக்கு சம்மந்தமான முடிவை எடுக்க வேண்டும் வேறு வட கிழக்கு மக்களின் பிரச்சினை கஸ்டம் தெரியாத ஹக்கீமை முன்னிலைபடுத்த நினைப்பது முஸ்லிம் சமுகத்துக்கு ஒரு சாபக்கேடாக அமையும் அத்தோடு நமது எதிர்கால சமுதாயம் ரோட்டில் நிற்க வேண்டிய நிலை வரும் என்பதை சிந்தித்து செயல்படுவது இன்றைய காலத்தின் தேவையாகும்

அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அமைச்சர் றிசாத் முன்னால் அமைச்சர் அதாவுல்லாஹ் ஆகியோர் வட கிழக்கு இனைய கூடாது என்று வட கிழக்கு மாகான அரசியல்வாதிகள் இனைந்து  கூறும் போது ஹக்கீம் அவர்களின் கருத்து  தூசி போல் பறந்து விடும்  எனவே ஹக்கீம் அவர்களின் கருத்துக்கு எவரும் அஞ்சத் தேவையில்லை

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *