Breaking
Sun. Nov 24th, 2024

(அனா)

இப்போது நாட்டில் சகல பிரதேசங்களிலும் சிறுவர் துஷ்பிரயோகமும் சிறுவர்கள் மத்தியில் போதைவஸ்த்துப் பாவனைப் பழக்கத்தை அதிகரிக்கவைக்கின்ற சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகரித்து காணப்படுகின்றன. இதனைத் தீர்ப்பதற்காகச் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நவீன பொறிமுறை அவசியம் என்று கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.


நாடளாவிய ரீதியில் சிறுவர்களுக்கு எதிராக இடம் பெறும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலயே பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்நதுகருத்துதெரிவிக்கையில்.

சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் போதை வஸ்துப் பாவனையில் இருந்து சிறுவர்களை பாதுகாப்பதுடன் அவர்களுக்கு இடம் பெரும் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக அதிகபட்ச தண்டனை வழங்கக் கூடிய வகையில் சட்ட மூலம் கொண்டுவரப்படுவதோடு சமுக மட்ட விழிப்புணர்வுகளும் இடம் பெறவேண்டும்.

சிறுவர்கள் இந்த நாட்டின் விலை மதிக்க முடியாத சொத்துக்கள் என்பதை நாம் ஒவ்வொரு வரும் எந்த சந்தர்ப்பத்திலும் மறந்து விடக்கூடாது நம்மிடம் உள்ள பெறுமதியான பொருட்களை மிகவும் அவதானமாக பாதுகாக்கிறோம் ஆனால் நாம் பெற்ற பிள்ளைகளிடத்தில் அந்த கரிசனையை காட்டுவதில் சிலர் தவறிவிடுகிறோம் சிறுவர்கள் விடயத்தில் பெற்றோரின் அசமந்தப்போக்கே அவர்களின் வாழ்க்கை சீரழிந்து செல்வதற்கான மிகமுக்கிய காரணமாகும் அனேகம் பெற்றோர் வறுமையை காரணம் காட்டி தமது பிள்ளைகளின் கல்வி விடயத்தில் பாராமுகமாக இருந்து விடுகின்றனர். சிறுவர்கள் வழி கெடுவதற்கு அதுவும் முக்கியகாரணமாகும்.

தன் பிள்ளை யாருடன் சேர்ந்து விளையாடுகிறது? பிள்ளையின் நண்பர்களில் சமூக விரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் உள்ளனரா? பகுதி நேர மேலதி கவகுப்புக்கு செல்லும் பிள்ளை சரியாக அங்கு செல்கின்றனரா? வகுப்பு முடிந்தவுடன் நேராக வீட்டுக்கு வருகின்றனரா? பிள்ளையின் அன்றாட செயற்பாடுகள் எவை? போன்ற விடயங்களில்; அவதானத்தைச ;செலுத்தவேண்டும். அப்போதுதான் சிறுவர்கள் மீதான வன்முறைகளை தடுக்கவும், தவிர்க்கவும் முடியும். சிறுவர் துஷ்பிரயோகமும், சட்டவிரோத போதை வஸ்த்துப்பாவனைக்கும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டும். அப்போதுதான் சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த முடியும்.

இந்த நல்லாட்சியில் மக்கள் பலத்த நம்பிக்கையில் இருக்கின்றனர். அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் நல்லாட்சி அரசின் மீது இருக்கின்றது. அந்தவகையில் இந்தநாட்டின் எதிர்கால தலைவர்களாகிய சிறுவர்களுக்கு நாம் பாதுகாப்பான ஒரு சூழலை அமைத்துக் கொடுப்பது இன்றியமையாத ஒன்றாகும் என்றும் தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *