நாட்டில் மீண்டும் தலைதூக்க முயற்சி செய்யும் இனவாத செயற்பாடுகளை கண்டித்து நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முஸ்லீம் அமைச்சர்களால் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பொரலஸ்கமுவ பள்ளிவாயல் தாக்குதல் உள்ளிட்ட அண்மைக்கால இனவாத செயற்பாடுகள் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
அங்கு அமைச்சருடன் இணைந்துகொண்ட ஹகீம் , ஹலீம் உள்ளிட்டோர் அமைச்சரவையில் தங்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இன்றைய தினம் குளியாப்பிடிய நகரில் இடம்பெறவுள்ள நிகழ்வில் ஞானசார தேரர் கலந்துகொள்ள உள்ள நிலையில் அவர் அங்கு சென்றால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என அமைச்சர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் சட்டம் ஒழுங்கு அமைச்சரிடன் கண்டிப்பான வேண்டுகோள் விடுத்துள்ள பிரதமர் வரும் இந்த விடயங்கள் தொடர்பில் கூடிய கவனமெடுக்குமாறு கேட்டுள்ளார்.