பிரதான செய்திகள்

வட மாகாண அமைச்சர்களுக்கு மோதப்போகும் விக்னேஸ்வரன்

வட மாகாண அமைச்சர்கள் நால்வருக்கு எதிராக தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் இருந்து ஊழல் குற்றச்சாட்டுக்கள் வருவதனால் அது தொடர்பாக விசாரணை செய்ய குழு அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என வட மாகாணசபையின் அனுமதியை வடக்கு முதல்வர் கோரியுள்ளார்.

எதிர்வரும் 58 ஆவது அமர்வில் இது தொடர்பாக அனுமதி கோரி பிரேரணையை வடக்கு முதல்வர் முன்வைத்துள்ளதாக தெரிய வருகின்றது.

இதே வேளை வட மாகாண சபை உறுப்பினரான பசுபதிப்பிள்ளை வட மாகாண விவசாய அமைச்சர் தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என ஏற்கனவே கோரியிருந்த நிலையில் முதலமைச்சரினால் இவ்வாறான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் எதிர்வரும் அமர்வின்போது இவ்விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமா என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

மன்னாரில் வாக்கு எண்ணும் ஒத்திகை

wpengine

வாகன இலக்கத் தகடுகளுக்கு பற்றாக்குறை , போக்குவரத்துத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

Maash

அப்பாவி முஸ்லிம்களை குற்றமிழைத்தவர்களாக காட்ட வேண்டாம்.

wpengine