பிரதான செய்திகள்

மீள்குடியேற்றச் செயலணி விவகாரம்! ஜனாதிபதியின் கருத்தை புறக்கணித்த அமைச்சர் றிசாட்

மீள்குடியேற்றச் செயலணியில், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் உள்வாங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய ஆலோசனை புறக்கணிக்கப்பட்டது.

இதன் விளைவாகவே, மீள்குடியேற்றச் செயலணி விவகாரம் விவாதத்திற்குரியதாகியுள்ளது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மீள்குடியேற்றச் செயலணியை உருவாக்கும் அமைச்சரவைப் பத்திரம், அமைச்சரவையில் முன்வைப்பதற்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி அதற்கு தனது அவதானத்தை வழங்கியிருந்தார். வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் மீள்குடியேற்றச் செயலணியில் உள்வாங்குமாறு ஜனாதிபதி பரிந்துரை செய்தார்.

ஜனாதிபதியின் பரிந்துரையை உள்வாங்காமலேயே அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீனே, ஜனாதிபதியின் பரிந்துரையை உள்ளீர்ப்பதற்கு அனுமதிக்கவில்லை என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வட மாகாண முதலமைச்சரை உள்ளீர்க்காமல் உருவாக்கப்பட்ட மீள்குடியேற்றச் செயலணிக்கு, வட மாகாண சபை தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

வட மாகாண சபையின் அமர்வு கடந்த 21ஆம் திகதி இடம்பெற்றபோது, மீள்குடியேற்றச் செயலணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறானதொரு நிலையில், மீள்குடியேற்றச் செயலணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்காவது நபராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவின் பெயரைப் பரிந்துரைத்துள்ளார்.

மீள்குடியேற்றச் செயலணியில் அமைச்சர்களான ரிஷாத் பதியுதீன், பைசர் முஸ்தப்பா, டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

 

 

Related posts

முஸ்லிம் பெண்களை சிரமத்துக்கு உள்ளாக்க வேண்டாம்.

wpengine

நுளம்புகளை விரட்டும் புதிய மருந்து

wpengine

போதைப்பொருள் விற்பனை செய்த அமெரிக்க வைத்தியர் ரஷ்யாவில் கைது!

Editor