Breaking
Sun. May 19th, 2024

சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகங்களை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு கலந்துரையாடல் மன்னாரில் இன்று இடம்பெற்றது.

மன்னார் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் இன்று காலை மன்னார் நகரசபை மண்டபத்தில் விழிர்ப்பணர்வு கலந்துரையாடல் இடம்பெற்றது.

குறித்த விழிர்ப்பணர்வு கலந்துரையாடலில் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா, வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தெண்ணகோன், மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.எஸ்.என்.பீரிஸ், உதவி பொலிஸ் அத்தியட்சகர் சமன் ஜெயசேகர, மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது சிறுவர் மற்றும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஸ்பிரயோகங்கள் குறித்தும் அவற்றை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.625.0.560.320.500.400.197.800.1280.160.95 (2)

குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடலில் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், கிராம மட்ட தலைவர்கள், கிராம அலுவலகர்கள், சர்வ மதத்தலைவர்கள், ஆசிரியர்கள் என பல நூற்றுக்கணக்காணவர்கள் கலந்து கொண்டனர்.625.0.560.320.500.400.197.800.1280.160.95

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *