பிரதான செய்திகள்

எழுத்து ஓடக்ளேயே வாள்ப்பைற்!

என்ன ஆதங்காக்கா எங்க போறிங்க

வாங்க வாப்பா எப்ப வந்திங்க

நான் சோதினை எல்லம் முடிஞ்சி காலத்தால தான் ஊருக்கு வந்த. அத இரிக்க என்ன அங்கால பெரியசனக் கூட்டமாயிருக்கி.

ஓம் ஓம் நானும் அவடத்தில நிண்டு தான் வாறன்.

என்ன இந்த நேரத்தில இவ்வளவு சனம்.

 அத ஏன் கேட்டிங்க தம்பி. இண்டக்கி நம்மட பாறுக் ஆலி முட மகனும் எஸ்ஸதீன் போடியார்ர மகனும் மறுகா நம்மட அசனாப் போடியார மகனும் சேர்ந்து பேப்பர் றிப்போட்டர் மார கூப்பிட்ட கூட்டம் போட்டயாம்.

 என்னத்துக்கோ….

 அது என்னடாண்டா நம்மட ரவூப் ஹக்கீம் தம்பி இரிக்கார்லவா அவர்ர தலமப்பதவியப்பறிச்சு நம்மட அஸறப்பு தம்பிய காட்டிக் குடுத்தாக்களுக்கிட்ட பங்கு வெச்சிக்குடுக்கயாம்.

 அதுக்கு இவடத்த என்ன சனம்

 அதத்தானே கேட்டிங்க இல்லியே. றிப்போட்டர் கூட்டத்துக்கு வந்த ஆக்கள்ள 17 பேரு மீராப்போடியார்ர ஆக்களாம். அவகளுக்கு காசி குடுத்தயாம். ஆனாசாயிவுப் போடியார்ர றிப்போட்டர் மாருக்கு காசி குடுக்கல்லியாம். இதனால சாயிவுப் போடியாரு பெரிய கொம்பலாம். இதனால தான் அந்தச் சனக்கூட்டம்.

 ஓஹோ அப்பிடியா சங்கதி…

 அது மட்டுமில்ல. இப்ப எஸ்ஸதீன் போடியார்ர மகனும் அசனாப் போடியார்ர மகனும் சேந்துக்கிட்டு சாயிவுப் பொடியார சமாறு புடிக்க அவர்ர ஊட்ட இரிக்காங்களாம்.

 எழுத் தோடக்களேயே வாள்ப்பைற். அப்ப நாம் போய் வாறண்டாகிளி.

Related posts

24 மணித்தியாலங்களுக்கு அனைத்து இறுதி சடங்குகளையும் நிறைவு

wpengine

பேஸ்புக் தடை! தொடரும் முறைப்பாடு

wpengine

tiktok பழக்கம் கர்ப்பமான 9ம் தர மாணவி , காரணமான இளைஜனை தேடும் போலீசார் . !

Maash