சொந்த தேவைகளுக்காக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிடம் 7 அரச வாகனங்களை பெற்றுகொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ராவனா பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று காலை வருகை தந்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, கட்டுமான மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சராக இருந்த காலத்தில், ராவனா பலய அமைப்பிற்கு 7 அரசாங்க வாகனங்களை வழங்கியுள்ளதாக பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இலங்கை பொறியியலாளர் திணைக்களத்தின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்ட வாகனங்களில் 7 வாகனங்களையே இவ்வாறு இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் பெற்றுகொண்டுள்ளார்.