(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)
விபச்சாரிக்கு வயது முதிர்ந்தவுடன் அடுத்தவர்களை கூட்டிக்கொடுப்பது போன்றதுதான் மு.கா தலைமைத்துவம் கிழக்குக்கு வேண்டும் என்ற வெற்றுக்கோசம்?
முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் கிழக்குமாகாணத்தில் அமைய வேண்டும் என்று அண்மைய சில காலமாக தலைவர் ரவுப் ஹக்கீம் மீது வசைபாடும் புதிய அரசியல் தந்திரோபாயம் ஒன்று முன்னெடுக்கப்படுவதனை ஊடகங்கள் வாயிலாக காணக்கூடியதாக உள்ளது.
முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக அரசியல் முகவரி பெற்ற சிலர், தங்களது சுயநல அரசியல் பிழைப்புக்காக முஸ்லிம் மக்களின் அதிகபட்ச ஆதரவினை பெற்ற முஸ்லிம் காங்கிரசினை அழிக்க வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் மக்களை திசை திருப்பும் நோக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு மார்க்கமல்ல என்றும், அஸ்ரப்புடன் அது அழிந்துவிட்டது என்றும், முஸ்லிம் காங்கிரசை அழித்துவிடு என்று அஷ்ரப் பிரார்த்தனை செய்தார் என்றும், அஷ்ரப் முஸ்லிம் காங்கிரசுக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு நுஆ என்னும் கட்சியை ஆரம்பித்தார் என்றெல்லாம் இரவு பகலாக பிரச்சாரம் செய்ததோடு பிரதேசவாதங்களையும் தூண்டினார்கள்.
ஆனால் இவர்களது எந்தவொரு பிரச்சாரங்களும், அலங்காரங்களும் மக்கள் மத்தியில் எடுபடவுமில்லை, அது நீடிக்கவுமில்லை. ஒவ்வொரு தேர்தல்களிலும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கே தங்களது ஆணையை வழங்கினார்கள். எனவேதான் முஸ்லிம் காங்கிரசிலிருந்து முஸ்லிம் மக்களை எக்காலத்திலும் பிரித்தெடுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள்.
தங்களது பழைய கோஷங்களுடன் மக்கள் மத்தியில் சென்றால் அதனை எதிர்காலங்களில் சந்தைப்படுத்த முடியாது. மேலும் முஸ்லிம் காங்கிரசை அழித்து தங்களது அரசியலை முன்னெடுக்கும் திட்டத்தினை நிறைவேற்ற நன்கு ஆழமாக வித்தியாசமான முறையில் சிந்தித்துள்ளார்கள்.
அதனால் மக்களது நாடித்துடிப்புக்கு ஏற்ப மக்களுக்கு ஏற்றாற்போல், மக்களுடனேயே சென்று தங்களது சுயநல அரசியலை முன்னெடுப்பதற்கான ஒரு புதிய சூழ்ச்சிதான் முஸ்லிம் காங்கிரஸ் எங்கள் சமூக கட்சி என்றும், அதன் தலைவர்தான் பிரச்சினை என்பதுமாகும். எனவே தலைவரை மாற்ற வேண்டும். அதற்காக கட்சியை ஹக்கீமிடமிருந்து மீட்பதற்கான செயல் திட்டம்தான் கிழக்கின் எழுட்சி என்ற பிரச்சாரங்களாகும்.
மு.கா சிறந்த கட்டமைப்புள்ள ஓர் தேசிய அரசியல் கட்சியாகும். அதற்கு நாடு முழுவதிலிருந்தும் கிராமங்கள் தோறும் மத்திய குழுக்கள், மாவட்ட குழுக்கள், செயற்குழுக்கள், அதிஉயர் பீடம் என கட்சியின் நிருவாக கட்டமைப்பும், மற்றும் உள்ளூராட்சிமன்ற, மாகாணசபைகள், பாராளுமன்றம் என மக்கள் பிரதிநிதிகளும் இருக்கின்றார்கள்.
இத்தனைக்கும் மேலாக கட்சிக்கு வாக்களிக்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும், போராளிகளுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் மீது இல்லாத அக்கறையும், ஆர்வமும் முஸ்லிம் காங்கிரசை கடந்த காலங்களில் அழிக்க முற்பட்டவர்களுக்கு ஏற்பட காரணமென்ன?
முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக அரசியல் முகவரி பெற்றவர்கள், அரசியலில் தங்களை கட்டம் கட்டமாக வளர்த்துக்கொண்டார்கள். இறுதியில் தலைவர் பதவியில் குறிவைத்து அதனை அடையும் விதத்தில் தலைவருக்கு எதிராக சதி முயற்சிகளில் ஈடுபட்டபோது, அது படுதோல்வி அடைந்து சதிமுயற்சியில் ஈடுபட்டவர்கள் கட்சியை விட்டு வெளியேறினார்கள். இது இந்த தலைவரின் காலத்தில் மட்டுமல்ல. மறைந்த தலைவரின் காலத்திலிருந்து நடைபெற்று வருகின்ற குழிபறிப்புக்களாகும்.
அவ்வாறு கட்சியிலிருந்து வெளியேற்றபட்டவர்களில் சிலர் தேசிய சிங்கள கட்சிகளில் பயணித்தார்கள். ஒரு சிலர் கட்சி அமைத்து தங்களது இலக்கை அடைந்தார்கள். இன்னுமொருவர் கட்சி அமைத்து அதனை விற்பனை செய்த வரலாறும் உண்டு.
இவ்வாறானவர்களை முஸ்லிம் மக்கள் ஒருபொழுதும் ஏற்றுக்கொண்டதில்லை. மாறாக பதவி வெறிபிடித்த சமூக துரோகிகளாகவே இவர்களை கருதினார்கள். இதனால் இவ்வாறானவர்கள் சிங்கள, தமிழ் மக்களின் வாக்குகளின் தயவுடனும், பேரினவாதிகளின் ஆசீர்வாதத்துடனும் அரசியல் அதிகாரத்தினை பெற்றதுடன், ஒருசிலர் சிங்கள தேசிய கட்சிகளின் தலைவர்களுக்கு சேவகம் செய்ததன் மூலம் அவர்கள் போடுகின்ற பிச்சையாக அரசியல் அதிகாரத்தினை பெற்றுக்கொண்டார்கள்.
முஸ்லிம் காங்கிரஸ் எமது மதமல்ல என்றும், கலியோடை பாலம் வரையில் எல்லைபோட்டு பிரதேசவாதத்தினை தூண்டி, அதன் மூலம் மு.காங்கிரசை அழிக்க முற்பட்டவர்களால் மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் எங்கள் கட்சி என்று உரிமை கோரிக்கொண்டு எந்த முகத்துடன் மக்கள் மத்தியில் செல்ல முடியும்? மீண்டும் அரசியலில் மறுவாழ்வு பெறுவதென்றால் முஸ்லிம் காங்கிரசை கைப்பெற்ற வேண்டும். அது நடைமுறை சாத்தியமற்ற விடயமாகும்.
பல கட்சிகளின் வாசப்படிகளிலும் ஏறி இறங்கி, முஸ்லிம் மக்களினால் சமூக துரோகி என்று முத்திரை குத்தப்பட்டவர்களால் மு.கா தலைவரை மாற்ற வேண்டும் என்றும், அத்தலைமை கிழக்குக்கு வர வேண்டும் என்றும் பிரச்சாரத்தினை தலைமை தாங்கி வளிநடத்தினால் அது மக்கள் மத்தியில் எடுபடாது என்று நன்கு உணர்ந்துகொண்டதனால், மக்களை மடையர்களாக்கி அவர்களை நம்ப வைப்பதற்காக ஒரு புதிய முகம் ஒன்று தேவைப்பட்டது. அந்த முகம்தான் வபா பாரூக் அவர்கள்.
ஒரு அப்பாவியான வபா பாரூக் அவர்கள் சுமார் இருபத்தைந்து வருடங்களாக எந்தவித அரசியல் செயற்பாடுக்களுமின்றி தானும் தனது வியாபாரமும் என்று இருந்தார். ஆனால் இவர் முஸ்லிம் காங்கிரசின் முதலாவது பொருளாளர் என்ற அடையாளம் உள்ளவர் என்பதனாலும், இவர் மறைந்த தலைவரின் பிரதேசத்தினை சேர்ந்தவர் என்பதனாலும் இவரைக்கொண்டு அரசியல் செய்ய சிலர் முற்பட்டுள்ளார்கள்.
இவர் 1990 இல் தலைவர் மர்ஹூம் அஸ்ரபினால் முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேற்ற பட்டிருந்தார். அதன் பின்பு இந்த வபா பாரூக் அவர்கள் பலதடவைகள் முஸ்லிம் காங்கிரசில் மீண்டும் இணைவதற்கு முயற்சித்தும் அன்றைய தலைவர் அதனை விரும்பி இருக்கவில்லை.
அன்று தலைவர் அஸ்ரப்பை தலைவர் பதவியிலிருந்து வீழ்த்தி, தலைமைத்துவத்தினை கைப்பெற்றுவதற்கான அடித்தளம் ஒன்று பலமாக அமைக்கப்பட்டது. அந்த சூழ்ச்சிக்கார கும்பலில் அன்றைய பொருளாளர் வபா பாரூக் அவர்களும் உடந்தையாக இருந்திருந்தார் என்பதனால்தான் அவரை தலைவர் இறுதிவரைக்கும் மன்னிக்கவில்லை.
இந்த வரலாற்றினை மக்கள் மறந்திருப்பார்கள் என்று மக்களின் மறதியில் உள்ள அதீத நம்பிக்கையின் பேரிலேயே இந்த வபா பாரூக் அவர்களுக்கு பெரியளவில் விளம்பரம் கொடுத்து எமது சமூகத்தலைவராக காட்ட முற்பட்டுள்ளார்கள். இவ்வளவுகாலமும் பல சுத்துமத்து அரசியல் செய்து, பதவிகளுக்காக பல கட்சிகளின் வாசப்படிகளிலும் ஏறி இறங்கி தங்களது சுயரூபத்தினை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டியதனால், தங்களை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையின் பயனாகவே இந்த வபா பாரூக் அவர்களை இறக்குமதி செய்துள்ளார்கள்.
இதனைத்தான் எமது ஊர் பாசையில் கூறுவார்கள். இளமைப்பருவத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டுவந்த விபச்சாரி தனக்கு வயது முதிர்ந்தவுடன் தன்னை சந்தைப்படுத்த முடியாது என்று அறிந்து, மற்றவர்களை கூட்டிக்கொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவாளாம். அதுபோலவே உள்ளது இந்த கிழக்குக்கு தலைமைத்துவம் வேண்டும் என்று பின்னணியில் இருந்துகொண்டு செயற்படுபவர்களின் வெற்றுக்கோசம்.