பிரதான செய்திகள்

யாழ்- மன்னார் வீதியில் வாகன விபத்து! பொலிஸ் அதிகாரி மரணம்

யாழ்ப்பாணம்-  மன்னார் பிரதான வீதியின் சங்குப்பிட்டி பிரதேசத்தில் டிப்பர் வண்டி ஒன்று, பொலிஸ் கான்ஸ்டபில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவர் பலியாகியுள்ளார்.  

யாழ். சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 48 வயதான கான்ஸ்டபில் ஒருவரே இதன்போது பலியாகியுள்ளார்.

கான்ஸ்டபிளின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் பூநகரி பொலிஸார்  விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகினறனர்.

Related posts

ராஜபக்ஷர்களை திருப்திப்படுத்தும் வண்ணம் அரசியலமைப்பை திருத்த அரசாங்கம் சதி

wpengine

சதாசிவம் வியாழேந்திரன் புதிய இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

wpengine

அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை குறைந்துள்ளது

wpengine