பிரதான செய்திகள்

வன ஜீவராசிகள் திணைக்கள பணிப்பாளரின் இராஜினாமா அமைச்சரினால் நிராகரிப்பு

வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளரான ஜெனரல் சுமித் பிலபிட்டியவின் இராஜினாமா கடிதத்தை நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் திணைக்களத்தின் பணிப்பாளர் தனது பதவியை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதற்கு அமைவாக பணிப்பாளரின் இராஜினாமா கடிதம் நேற்று அமைச்சரிடம் கையளித்த வேளையில், அவரினால் நிராகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாகவும், பணிப்பாளர் சுமித் பிலபிட்டியவை குறித்த பதவியில் நீடிப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்து வருவதாகவும் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியா பொது வைத்தியசாலையின் அசமந்த போக்கு! ஒருவர்உயிரிழப்பு

wpengine

ஜனாதிபதியின் உத்தியோக வெளிநாட்டு பயணத்தையொட்டி 5 பதில் அமைச்சர்கள் நியமனம்!

Editor

புதிய தேர்தல் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

Editor