Breaking
Sun. Apr 28th, 2024

கண்டி  லைன் பள்­ளி­வா­சலின் மினாரா (கோபுரம்) நிர்­மா­ணிப்­ப­தற்கு எனது பத­விக்­கா­லத்­திலும் அதற்கு பின்பும் கண்டி மாந­கர சபை­யினால் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.
கண்டி நக­ரி­லுள்ள தலதா மாளிகை உலக மர­பு­ரிமை சொத்­தாகும். அதனால் அதன் உய­ரத்­தையும் மீறி வேறு மதஸ்­த­லங்கள் நிர்­மா­ணிக்­கப்­பட முடி­யாது என முன்னாள் கண்டி மாந­கர முதல்­வரும் கண்டி மகா விஷ்ணு தேவா­ல­யத்தின் பஸ­நா­யக்க நில­மே­யு­மான மகேந்­திர ரத்­வத்த தெரி­வித்தார்.

லைன் பள்­ளி­வா­சலில் கோபு­ர­மொன்று அமைக்­கப்­ப­டு­வ­தற்கு சில வரு­டங்­க­ளுக்கு முன்பு இப்­பி­ரச்­சினை ஏற்­பட்­டது. இதற்கு தலதா மாளி­கையின் திய­வ­தனே நில­மேயும் பஸ­நா­யக்க நில­மேக்­களும் எதிர்ப்புத் தெரி­வித்­தனர். எதிர்ப்­புகள் மேலெ­ழுந்­ததன் கார­ண­மாக மினாரா நிர்­மாணப் பணிகள் நிறுத்­தப்­பட்­டன. தற்­போது மீண்டும் இந்த வேலையை ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்கள்.

இந்தப் பள்­ளி­வாசல் தலதா மாளி­கைக்கு 200 மீற்றர் தூரத்­தி­லேயே  அமைந்­துள்­ளது.

உலக மர­பு­ரிமை சொத்­தான தலதா மாளிகை அமைந்­தி­ருக்கும் பகு­தியில் பள்­ளி­வாசல் நிர்­மா­ணத்­துக்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டமை நல்­லி­ணக்­கத்­துக்கு சாத­க­மாக அமைந்­துள்­ளது.
ஆனால் சவூதி போன்ற முஸ்லிம் நாடு­களில் பௌத்த மதத்­துக்கும் ஏனைய மதங்­க­ளுக்கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

சவூதி அரே­பி­யா­வுக்குள் புத்த பெரு­மானின் படத்தைக் கூட எடுத்துச் செல்ல முடி­யாது என்­பதை முஸ்­லிம்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்நிலையில் இலங்கையில் வழங்கப்பட்டுள்ள மத சுதந்திரத்தை முஸ்லிம்கள் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *