அரசியல்செய்திகள்பிரதான செய்திகள்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை சைக்கில் மற்றும் சங்கு கூட்டணி வசமானது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஜனனாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியவற்றின் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்றையதினம் மதியம் 11.30 மணிக்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவனந்தினி பாபு தலைமையில் பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

தவிசாளர் தெரிவின் இது மூவர் போட்டியிட்ட முன்மொழியப்பட்ட நிலையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.

இரகசிய முறையிலான வாக்கெடுப்புக்கு சபையின் 36 உறுப்பினர்களில் 22 உறுப்பினர்கள் வாக்களித்திருந்த நிலையில் முதலாம் சுற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் முதல் நிலை பெற்ற வேட்பாளர் பெரும்பான்மைக்குரிய வாக்கை எட்டாத்தால் இரண்டாம் சுற்று தெரிவு இரகசியமா? பகிரங்கமா என்பது தொடர்பான வாக்கெடுப்பு சமமாக வந்த நிலையில் திருவுளச்சீட்டு முறைமூலம் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவது என தீர்மானித்து இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதனடிப்படையில் பெரும்பான்மை வாக்குகளை பெற்று சங்கு சைக்கிள் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தியாகராஜா நிரோஷ் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

உபதவிசாளர் தெரிவும் இரகசிய வாக்கெடுப்பு முறைமூலம் நடத்தப்பட்ட நிலையில் சங்க சைக்கிள் கூட்டணியின் உறுப்பினரன ஜனர்த்தனன் 14 க்கு 13 என்ற வாக்குகள் அடிப்படையில் வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வலி வடக்கு தவிசாளராக சோமசுந்தரம் சுகிர்தன் …ஆதரவு 14 எதிர் 9 நடுநிலை 12

Related posts

ஹக்கீம் மிகவும் இழி நிலைக்கு சென்றுவிட்டார்.

wpengine

பள்ளிவாசல் மீது தாக்குதல்! வித்தியாசமான தண்டனை

wpengine

ஆரம்ப சுகாதார சேவையை சீரமைக்க உலக வங்கியிடமிருந்து 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்!

Editor