செய்திகள்பிரதான செய்திகள்

மின் தூக்கி அறுந்து விழுந்ததில் 19 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு.

மொரட்டுவையில் அடுக்குமாடி ஹோட்டலில் மின் தூக்கி அறுந்து விழுந்ததில் 19 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தன்று ஹோட்டல் பணிபுரிந்த இளைஞன் மின் தூக்கியை பயன்படுத்தியுள்ளார். இதன்போது, மின் தூக்கி அமைப்பு செயலிழந்து அறுந்து விழுந்ததில் இளைஞனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த இளைஞன் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டலின் முகாமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இன்று தொழிலாளர் தினம்

wpengine

மனைவியை சுட்டுக் கொன்ற கணவன், தன்னைத்தானே சுட்டுக்கொண்டு மரணம்.

Maash

சம்பந்தனை சந்தித்த மஹிந்த,நாமல்

wpengine