விவசாயிகள் மற்றும் நுகர்வோரை இடைத்தரகர்களிடம் இருந்து பாதுகாத்து கொள்ளவது தொடர்பில் மீண்டும் சிந்திக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய விவசாய வர்த்தக அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (03) முற்பகல் பொலன்னறுவை புத்தி மண்டபத்தில் நடைபெற்ற போது இதனை தெரிவித்தார்.
தனியார் துறையினரின் ஒத்துழைப்பின் கீழ் விவசாயிகளுக்கு தேவையான ஆலோசனைகள் , விதைகள் மற்றும் பிற வசதிகள் இந்த நிகழ்வின் போது பெற்றுக்கொடுக்கப்பட்டது.
நுவரெலியாவில் பயிரிடப்படும் காய்கறிகள் 8 முதல் 10 வரையிலான இடைத்தரகர்களினூடாகவே நுகர்வோரை சென்றடைவதாக ஜனாதிபதி இதன் போது தெரிவித்துள்ளார்.
20 விவசாயிகளுக்கு ஒரு அடையாள நிகழ்வாக விவசாய உபகரணங்களும் ஜனாதிபதியினால் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது.