செய்திகள்பிரதான செய்திகள்

தேசபந்து தென்னகோனை தேடி சோதனை, விரைவில் கைது செய்யப்படுவார்!

கட்டாய விடுமுறையில் உள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்ய பொலிஸார் புலனாய்வுப் பிரிவுகளை ஈடுபடுத்தியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

பொலிஸார் முன்னாள் பொலிஸ் மா அதிபரைத் தேடி சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும்,  அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று அரசாங்கம் நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

மின் இணைப்பு கட்டணம் செலுத்த இயலாத நுகர்வோரை கண்டுபிடிக்க புதிய வழி

wpengine

தொண்டமானின் மகனுக்கு எச்சரிக்கை கொடுத்த கோத்தா

wpengine

புதிதாக அமைச்சர்கள் மாறும் போது நாற்காலிகள் கொள்வனவு செய்வதற்கே பெருமளவு பணம்

wpengine