கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை காரணமாக தொடர்ச்சியான பாதிப்பினை பொதுமக்கள் எதிர்நோக்கி இருந்தனர்
இவ்வாறான மழையின் பாதிப்புக்கு உள்ளான பொதுமக்களுக்கென சீன அரசாங்கம் உலர் உணவு பொதிகளை வழங்கி இருந்தது.
சீன அரசாங்கத்தின் சகோதர பாசம் செயல்திட்டத்தின் ஒரு அங்கமாக இவ் உலர் உணவுப் பொதிகள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.
இன்ற பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட செயலகத்தில் இவ் உலர் உணவுப்பொதிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.
இந் நிகழ்விற்கு இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் பொறுப்பதிகாரி Mr. Zhu Yanwei, chargé d’affaires ad interim.
Mr. Qin Ligong, Chief of Political Section
Mr. Jin Enze, Third Secretary
Mr. Xing Chaoyang, Attache
Mr. Yu Boce, Attache ஆகியோர் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு வருகை உலர் உணவுப்பொதிகளை நேரடியாக பொதுமக்களுக்கு கையளித்திருந்தனர்.
குறித்த இந்த உலருணவுப்பொதி வழங்கும் திட்டத்தில் அண்ணளவாக 6500 ரூபா பெறுமதியுடைய 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான 350 பொதிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதில் முதல் கட்டமாக இன்றையதினம் கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
ஏனைய பொதிகள் மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவுசெய்யப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலர்,
உதவிப்பணிப்பாளர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு,நிர்வாக உத்தியோகத்தர்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள்,கிராம அலுவலர்கள்,பயனாளிகள் கலந்துகொண்டிருந்தனர்.
மாவட்ட ஊடகப்பிரிவு
மாவட்டச்செயலகம்
கிளிநொச்சி

