Breaking
Sun. Nov 24th, 2024

கடனைப் பெற்றுக் கொண்டும், சொத்துக்களை விற்றும் நாட்டின் பொருளாதாரத்தை ஒருபோதும் ஸ்திரப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இதுவரை தூரத்தில் இருந்துக்கொண்டுதான் தேசிய சொத்துக்களை விற்றுக் கொண்டிருந்தார்கள்.

இப்போது அருகில் சென்றே சொத்துக்களை விற்கப் போகிறார்கள். அந்தவகையில், அதானி உள்ளிட்டவர்களையும் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.

அவரிடம் எதை விற்றுள்ளார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. நாடாளுமன்றில் நாம் கெஞ்சிக் கேட்டால்தான் எதை விற்றுள்ளார்கள் என்று தெரியவருகிறது.

நாடாளுமன்றுக்கு நிதி அதிகாரம் உள்ளது. ஆனால், தேசிய சொத்தை விற்ற பின்னர்தான், நாடாளுமன்றுக்கு அறிவிக்கப்படுமாக இருந்தால், நாடாளுமன்றுக்கு எதற்காக நிதி அதிகாரம்?

மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்கும் செயற்பாடுகளா இவை? இப்போதும் இந்தியாவிலிருந்து ஜனாதிபதி திருப்பிய பின்னர்தான், இந்தியாவுக்கு அவர் எவற்றையெல்லாம் விற்றுள்ளார் என்பது தெரியவரும்.

ஜனநாயகத்தையும் நாடாளுமன்ற நிதி அதிகாரத்தையும் புறந்தள்ளி, இந்த பயணத்தை மேற்கொண்டால் விளைவுகள் பாரதூரமாகத்தான் அமையும்.

கடனைப் பெற்றுக் கொண்டும், சொத்துக்களை விற்றும் நாட்டின் பொருளாதாரத்தை ஒருபோதும் ஸ்தீரப்படுத்த முடியாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

A B

By A B

Related Post