Breaking
Wed. May 1st, 2024

உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றின் மூலம் முசலிக்கு வருகை தந்த நோர்வே நாட்டுத் தூதுவரை சந்தித்து முசலிப் பிரதேச மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள், அவர்களின் கல்வி, பொருளாதாரம், மீள்குடியேற்றம் மற்றும் மீன்பிடி, விவசாயம் என்பன குறித்து கலந்துரையாடப்பட்டன.

மேலும் வடமாகாண முஸ்லிம்களின் வாழ்வியல், அவர்களின் மீள்குடியேற்றத்திலுள்ள சவால்கள் மற்றும் வாக்குரிமை என்பன குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

அத்தோடு வடமாகாண அரசியலில் முஸ்லிம்களின் வகிபாகம், தேசிய மற்றும் உள்ளக அரசியலின் நிலைப்பாடு, சமுக பாகுபாடுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

மேலும் மீள்குடியேற்றத்தின்போது முஸ்லிம் பெண்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.

அத்தோடு பாலர் பாடசாலை நியமனத்தில் பெண்களுக்கு பல்வேறு பாகுபாடு நடைபெறுவதாக சுட்டிக் காட்டினார்.

இவைகளுக்கு நியாயமான தீர்வுகளைப் பெற்றுக் தருவதற்கு முயற்சிப்பதாகவும். அத்தோடு உரியவர்களுக்கு தங்களது பிரச்சனைகளை முன்வைப்பதாகவும் தெரிவித்தார்.

இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகள்

P.M.Mujeebur Rahman

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *