Breaking
Sun. Nov 24th, 2024

புனித வெசாக் பௌர்ணமி தினம் இன்றாகும்

உலகளாவிய ரீதியில் பௌத்தர்கள் பல்வேறு புண்ணிய காரியங்களில் இன்று ஈடுபடுவர்.

இதேவேளை இன மத மொழி மற்றும் சாதி வேறுபாடின்றி சமத்துவத்திற்கு மதிப்பளிக்கும் தன்மை மனித மனங்களில் விருத்தியடைய வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி வௌியிட்டுள்ள வெசாக் தின செய்தியிலேயே இது குறிப்பி்ப்பட்டுள்ளது.

நிதானமான அறிவு,கருணை,அன்பு,நடுநிலைமை மற்றும் எளிமை எங்குள்ளதோ அங்குதான் உண்மையான பௌத்த மதத்தை காணலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மக்களின் விடுதலையை இலக்காகக் கொண்டு செயற்படும் வழியில் அனைவரும் பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.Vesak-Tamil-2016-1024x1453

அத்துடன் பரிவிரக்கம் அன்பு கருணை மற்றும் மன அமைதி ஆகியனவற்றின் மூலமே நற்குணங்களை வளர்த்து கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ள வெசாக் தின செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் ஒரு பிரிவினரால் தவறொன்று நிகழுமாயின் அதன் உண்மைத்தன்மையினை மையமாகக் கொண்டே திருத்தியமைக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.

பகைமையை நட்புணர்வு மூலம் வெற்றி கொள்வதற்கும் மானிடப் பண்புகளைக் கொண்டு மானிடப் பண்புகள் அற்றவனை வெற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை புத்த பெருமானின் பிறப்பு ஞானம் பெறுதல் மற்றும் இறப்பு உள்ளிட்டவற்றை நினைவு கூறும் வெசாக் தினம் இலங்கையர்களுக்கு மிகவும் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் வெசாக் தின செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்த பெருமானின் வழிகாட்டலின் பிரகாரம் பொறாமை குரோத எண்ணங்கள் என்பன அகன்று நற்சிந்தனைகள் மக்களின் மனதில் பிறக்க வேண்டுமென பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து இன மக்களிடையேயும் சமத்துவம் சகவாழ்வு மலர பிரார்த்திப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தமது வெசாக் தின செய்தியில் கூறியுள்ளார்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *