Breaking
Fri. Apr 19th, 2024

சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும் பன்னூலாசிரியருமான எம்.எம்.எம்.நூறுல்ஹக் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘முஸ்லிம் அரசியல் இயலாமை’ எனும் தலைப்பிலான நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை(21) மாலை 3.45 மணிக்கு சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் வைத்திய கலாநிதி எஸ்.நஜூமுதீன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் பிரதம அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமா எம்.ரி.ஹஸன் அலி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நூலின் முதல் பிரதிகளை ஹபீப் வங்கியின் முகாமையாளர் கவிஞர் எ.எல்.அன்வர்தீன், தொழிலதிபர் எம்.எச்.நாசர் ஆகியோர் பெறவுள்ளனர். தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா நூலின் திறனாய்வுரையை நிகழ்த்தவுள்ளர்.

கருத்துரையை உரையாடலுக்கும் ஆய்வுக்கமான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சிராஜ் மஷ்ஷூர், தொடக்க உரையை கவிஞர் நவாஸ் சௌபி ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர் பன்நூலாசிரியர் தீரன் ஆர்.எம்.நௌசாத் கவி வாழ்த்தினைப் பாடவுள்ளார்.

பி.எம்.எம்.ஏ.காதர்

1-PMMA CADER-NEWS-18-05-2016

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *