பிரதான செய்திகள்

புத்தளம் நுரைச்சோலையில் ஒருவர் படுகொலை – சந்தேக நபர் தலைமறைவு!

புத்தளம் நுரைச்சோலை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தழுவ பகுதியில் இரும்புத் கம்பியால் தாக்கப்பட்டு 30 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (30) மாலை கிரிக்கெட் மைதானத்தில் இருவருக்கும் இடையில் தகராறு இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது உயிரிழந்தவரின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு முதல், தாக்கப்பட்ட நபர் வீட்டிற்கு வராததன் காரணத்தினால் குறித்த நபரை உறவினர்கள் தேடிவந்துள்ளனர்.

இதன்போது தாக்கப்பட்ட நபர் வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள மணல் திடலில் சடமாக காணப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு நுரைச்சோலைப் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் நேரில் சென்று சடலத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது தலையில் பொல்லால் தாக்கிய காயங்களும் காலில் வெட்டுக்காயங்களும் காணப்பட்டதாக தடயவியல் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பதுங்கிவிட்டதாகவும் மோப்ப நாயின் உதவியைக் கொண்டு சந்தேக நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நுரைச்சோலைப் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்லாயிரக் கணக்கான வயல் நிலங்கள் சேதமடைந்துள்ளதுடன்

wpengine

03 நாட்கள் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-அமைச்சு

wpengine

வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ்லிம் கட்சிகள் ஒன்றினைய வேண்டும்.

wpengine