Breaking
Sun. Nov 24th, 2024

நாட்டில் பெற்றோலிய இறக்குமதி, விநியோகம் மற்றும் களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகளை வெளிநாட்டு நிறுவனங்கள் ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தம் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் கையெழுத்திடப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சீனாவின் சினொபெக், அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெற்றோலியம், அமெரிக்காவின் ஆர்.எம்.பார்க்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எரிபொருள் விநியோக சந்தையில் தமது செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அனுமதி வழங்க கடந்த மார்ச் 27ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

எரிபொருள் விநியோகத்திற்கு மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கல் தொடர்பில் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.

குறித்த 3 நிறுவனங்களுக்கும் தலா 150 வீதம் எரிபொருள் நிரப்பும் நிலையங்களை நிறுவுவதற்கு அனுமதி வழங்கப்படவுள்ளது.

எமக்கு உரிமம் உள்ள 234 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை தவிர்த்தே , மேற்கூறப்பட்ட நிறுவனங்களினால் மேலதிக எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. இவற்றில் எமக்கு உரித்து காணப்படாது.

மாறாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களால் அவை நிர்வகிக்கப்படும்.

இந்நிறுவனங்களுக்கும் எரிபொருள் விலை சூத்திரம் பொறுந்தும். விலை சூத்திரத்திற்கமைய அரசாங்கத்தினால் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படும்.

ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் அவற்றால் சுயாதீனமாக முன்னெடுக்கப்படும். பெற்றோலிய கூட்டுத்தாபனமும் அதன் அடிப்படையில் தற்போதும் சுயாதீன நிறுவனமாகவே செயற்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

A B

By A B

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *