பிரதான செய்திகள்

சிறுவர்களிடையே அதிகம் பரவும் கண்சார்ந்த நோய் – சுகாதார தரப்பு அறிவுறுத்தல்!

தற்போது சிறுவர்களுக்கிடையே கண்சார்ந்த நோய் ஒன்று பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பெற்றோர் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளது.

கண் சிவப்பாகுதல், கண்ணில் இருந்து நீர் வெளியேறுதல், கண் அரிப்பு மற்றும் இருமலுடன் தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படுவதாக கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நோய் அறிகுறிகள் தென்படுமாயின் சிறுவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் அவ்வாறானவரகளை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறும் அவர் பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.

Related posts

பெப்ரவரி 10 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தல்

wpengine

பாயீத் விடுதியின் சேவைகளை பாராட்டிய மாவட்ட LIONS CLUBS ஆளுனர்

wpengine

ACMC ஆதரவுடன் ஹொரபத்தான பிரதேச சபையின் ஆட்சியை NPP கைப்பற்றியது !

Maash