Breaking
Fri. May 3rd, 2024

தமிழ் இனத்துக்கு எதிரானவராக என்னை சித்தரிப்பது வேதனையளிப்பதாக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை : போா் முடிந்ததால் கடந்த 10 ஆண்டுகளாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே 2009 ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்ற கருத்தைத் தெரிவித்தேன். அப்பாவி மக்களின் படுகொலைகளை நான் ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை ஆதரிக்கவும் மாட்டேன்.

சிங்களா்கள், மலையகத் தமிழா்கள், ஈழத் தமிழா்களை ஒன்றாகவே பாா்க்கிறேன்.

நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பாா்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் இந்திய அணியில் இடம்பெற முயன்றிருப்பேன். இலங்கைத் தமிழனாக பிறந்தது என் தவறா?

சிலா் அரசியல் காரணத்துக்காக தமிழ் இனத்துக்கு எதிரானவா் என்பது போல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *