பிரதான செய்திகள்

தேர்தலை நடாத்த பணம் அச்சிடல்! தேர்தலை நடாத்த வேண்டும்! அனுர

மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலவும் சந்தர்ப்பத்தில் பணத்தை அச்சிட்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதலாவது நாடாக இலங்கை இருக்கும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலை மாவட்டம் தெரணியகலை பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு 2 ஆயிரத்து 500 பில்லியன் ரூபா நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டாலும் அவை எந்த சந்தர்ப்பத்திலும் உடனடியான செலவுகளுக்காக பயன்படுத்தவில்லை.

இந்த நிலையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த போதிய நிதியில்லாத காரணத்தினால், பணத்தை அச்சிட வேண்டிய நிலைமையேற்பட்டுள்ளதாகவும் சியம்பலாப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால், தமது கட்சி அதனை தடுத்து நிறுத்த எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

மாத்தறையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். 

Related posts

பசில் ராஜபக்ஷ மீண்டும் கைது

wpengine

நிகழ்வில் பங்கேற்பதை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தவிர்த்துள்ளார்.

wpengine

சாய்ந்தமருது மாநகர சபை விரைவில்! வர்த்தகமானி வெளியிடு

wpengine