உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஏ.ஆர். ரஹ்மான் பத்து நாட்களுக்கு சைவமாக மாறுகிறார்.

ரோஜா படத்தில் இடம் பெற்ற ´சின்ன சின்ன ஆசை´ பாடலின் மூலம் திரை இசையுலகில் பிரபலமடைந்து, தென்னிந்திய மொழிகள், இந்தி என்ற எல்லையையும் கடந்து ´ஹாலிவுட்´ வரை சிறகடித்துப் பறந்தவர், ஏ.ஆர். ரஹ்மான்.

தற்போது, இவரின் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் ´பொன்னியின் செல்வன் -1´ திரைப்படம் வருகிற செப்டம்பர் 30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும், இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மானின் பதிவு ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அதில், “அடுத்த பத்து நாட்களுக்கு சைவமாக மாறுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர் அதிகம் லைக் செய்து வருகின்றனர்.

Related posts

14 ஆயிரம் பட்டதாரிகள் இம்மாத இறுதிக்குள் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

wpengine

முன்னால் அமைச்சரின் நீதி ஒதுக்கீட்டில் பாடசாலை நுழைவாயில்

wpengine

சிரேஷ்ட ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல்; பொலிஸ்மா அதிபரிடம் ரிஷாட் எம்.பி முறைப்பாடு!

Maash