உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

ஜேர்மனில் முதல் முறையாக இஸ்லாமியப் பெண் சபாநாயகராக தெரிவு

ஜேர்மன் நாட்டின் மாகாண பாராளுமன்ற வரலாற்றில் முதன் முதலாக இஸ்லாமியப் பெண் ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாமியரான முத்ரீம்  ஆர்ஸ் என்ற 50 வயதுடைய பெண்ணே, படீன் – வுட்டம்பேர்க் மாகாண பாராளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் மூலம், ஜேர்மன் மாகாணங்களில் உள்ள பாராளுமன்ற வரலாற்றில் ஒரு இஸ்லாமியர் சபாநாயகராக தெரிவாகியுள்ளது இதுவே முதல் தடவையாகும். முத்ரீம்  ஆர்ஸ் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.

இவரது பெற்றோர் துருக்கி நாட்டிலிருந்து ஜேர்மனியிலுள்ள ஸ்டட்கர்ட் நகருக்கு குடிபெயர்ந்துள்ளதுடன் இவரது தந்தை பாரந்தூக்கி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். தாய் துப்புரவு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

ஜேர்மனியின் கிரீன் கட்சியை சேர்ந்த முத்ரீம்  ஆர்ஸ், படீன் – வுட்டம்பேர்க் என்ற மாகாணத்தின் வரி மற்றும் நிதி தொடர்பான அரசு ஆலோசகராக பணியாற்றி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒதுங்கி விட அனுரகுமார திஸாநாயக்க சீற்றம்

wpengine

வீதிகளில் குப்பைகளை கொட்டவேண்டாம் மன்னார் நகர சபை செயலாளர்

wpengine

கிழ‌க்கு முத‌ல்வ‌ரை பாராட்டும்! உல‌மா க‌ட்சி த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

wpengine