பிரதான செய்திகள்

ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தமைக்காக மன்னிப்புக் கோரியுள்ளார்-திஸ்ஸ ஜனநாயக்க

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்தமைக்காக முன்னணி ஆசிரியர் திஸ்ஸ ஜனநாயக்க மன்னிப்புக் கோரியுள்ளார். விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நாட்டின் குடிமக்களிடம் நான் மன்னிப்புக் கோருகின்றேன். இந்த அரசாங்கத்தை ஆதரித்தமைக்காக நான் ஏமாற்றப்பட்டுள்ளேன. ஜனாதிபதி பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் என்ற நம்பிக்கையின் பேரில் தானும் பலருடன் இணைந்து கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்ததாக திஸ்ஸ ஜனநாயக்க தெரிவித்தார்.

இந்நிலையில், முன்னோக்கிச் செல்லும்போது எந்தவொரு தனிநபருக்கும் அல்லது எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்றும் நடுநிலைமையுடன் இருப்பேன் என்றும் ஜனநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.  

Related posts

32,380 கஞ்சா செடிகளுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Maash

யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று மகளிர் தினம்..!

Maash

நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை வழமைக்கு திரும்பி நாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவேண்டும்.

wpengine