Breaking
Sun. May 19th, 2024

மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் நேற்று மாலை 7 மணியலவில் விபத்துக்குள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்;

மாலை நேரத்தில் சிலாவத்துறையில் இருந்து மரிச்சிக்கட்டி செல்லும் பிரதான வீதிக்கு அருகாமையில் பிரதேச செயலாளர் மற்றும் இன்னும் சில ஊழியர்களும் உடற்பயிற்சி கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் கொக்குப்படையான் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கில் வேக கட்டுபாட்டை இழந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பிரதேச செயலாளர் மற்றும் ஊழியர்கள் மீது மோதியதாகவும் அறியமுடிகின்றது.

அதன் பின்பு சிலாவத்துறை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பிரதேச செயலாளர் மற்றும் ஊழியர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கின்றன.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *