பிரதான செய்திகள்

இந்த அரசை வீட்டுக்கு விரட்டியடித்தால்தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.

ராஜபக்ச அரசை வீட்டுக்கு விரட்டியடித்தால்தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும் என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ அறிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,

“இந்த அரசு கொடூர அரசு. மக்களை எப்படியெல்லாம் வதைக்கு முடியுமோ அந்தளவுக்கு துன்பங்களை அள்ளி வழங்கியுள்ளது இந்த அரசு. வாழ்க்கைச்சுமை உச்சம் தொட்டுள்ளது. மறுபுறத்தில் மத்திய வங்கியோ தொடர்ச்சியாக பயணத்தை அச்சிட்டுவருகின்றது.

இதனால் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும். பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இந்த அரசுக்கு மக்கள் பற்றி துளியும் கவலை இல்லை. தமக்கான பாதுகாப்பு மற்றும் தமது சகாக்களின் பாதுகாப்பு என்பனவே ஆட்சியாளர்களுக்கு முக்கியம்.

அதனால்தான் மக்கள் நலன் பற்றி சிந்திக்காமல் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. இந்த அரசை வீட்டுக்கு விரட்டியடித்தால்தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நிம்மதி கிடைக்கும்.

அரசை விரட்டிக்கும் பொறுப்பை நாம் கையில் எடுத்துள்ளோம். எனவே, மக்கள் அனைவரும் எமக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” – என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆரம்ப சுகாதார சேவையை சீரமைக்க உலக வங்கியிடமிருந்து 5.5 மில்லியன் அமெரிக்க டொலர்!

Editor

பொதுநோக்கு மண்டபம் திறந்து வைத்த வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine

அரச பணியாளர்களுக்கு வேதன உயர்வை வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானம்.

wpengine