Breaking
Fri. Apr 26th, 2024

உண்மையில் கிழக்கு மாகாண தமிழ் இனவாத அரசியல்வாதிகள் போன்ற முட்டாள்கள் உலகில் இருக்க முடியாது என ஸ்ரீ லங்கா ஐக்கிய காங்கிரஸின் செயலாளர் நாயகம் முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.


அவர் இன்றையதினம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையில்,


கடந்த மைத்திரி ஆட்சியில் மைத்திரி செய்த ஒரேயொரு நல்ல செயல் ஹிஸ்புல்லா என்ற தமிழ் பேசுவபவரை கிழக்கு மாகாண ஆளுநராக நியமித்ததாகும். அவரை நீக்க வேண்டும் என போராடியவர்கள் தமிழர்களாவர்.


சிங்களவர் ஒருவரால் நியமிக்கப்பட்ட ஆளுநருக்கு எதிராக போராடிய தமிழர்கள் அவர் நீக்கப்பட்டு சிங்களவர் ஒருவர் ஆளுநராக வர ஒத்துழைத்து விட்டு இப்போது சுடுகுது மடியப்பிடி என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.


ஹிஸ்புல்லா ஆளுநராக இருந்திருந்தால் இத்தகைய சட்டத்துக்கு முரணான குடியேற்றத்துக்கு அனுமதித்திருப்பாரா?
அத்துடன் மாடு அறுப்பு தடை செய்யப்பட வேண்டும் என குரல் எழுப்பியவர்களுக்கும் தமிழர் பலர் ஆதரவாக இருந்தனர்.


அவ்வாறு மாடு அறுப்பு தடை சட்டம் வந்தால் மாடு வளர்ப்பது குறைந்து விடும். இந்த நிலையில் மாடுகளுக்கு மேய்ச்சல் தரை தேவையில்லையே என அரசு கூறி அவற்றை விவசாய பூமியாய் மாற்றுவதில் என்ன தவறு என கேட்டால் நிச்சயம் அது நியாயமாகவே தோன்றும்.
கிழக்கில் மாடு வளர்ப்போரில் 90 வீதமானோர் தமிழர்களும், சிங்களவர்களுமாகும். இதைத்தான் சொல்வது தன் கண்ணை தானே குத்திக்கொள்வதாகும்.


முஸ்லிம் ஒருவர் ஆளுநராக இருப்பதா? எமது இரு கண்ணும் போனாலும் எதிரியின் இரு கண்ணும் போக வேண்டும் என்று நினைத்தவர்கள் இன்று முழு உடலும் பறி போகும் நிலைக்கு வந்துள்ளனர்.


தமிழரும், முஸ்லிம்களும் கிழக்கில் ஜனநாயக அரசியலில் ஒன்றுபடாத வரை கிழக்கை தமிழர்களாலும் காப்பாற்ற முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *