பிரதான செய்திகள்

சாய்ந்தமருது நகர சபை கோஷத்தை முன்வைத்து அதாவுல்லா மக்களை ஏமாற்றி வருகின்றார்-ஏ.சி.யஹியாகான்

சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை வைத்து இன்னும் இன்னும் அந்த மக்களைத் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏமாற்றக் கூடாதென முஸ்லிம் காங்கிரஸின் பிரதிப் பொருளாளரும் உயர் பீட உறுப்பினருமான ஏ.சி.யஹியாகான் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருதிலுள்ள தனது அலுவலகத்தில் தமது ஆதரவாளர்கள் மத்தியில் இன்று(5) உரையாற்றும் போதே யஹியாகான் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

கல்முனை மாநகர சபையின் பதவிக்காலம் பெப்ரவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் 2022 பெப்ரவரியில் சாய்ந்தமருது நகர சபை மலரும் என்று கூறி 9000 வாக்குகளைக் கபளீகரம் செய்த அதாவுல்லா, பொதுத் தேர்தலிலும் அம்மக்களின் வாக்குகளைப் பெற்றார்.

ஆனால் நகர சபை இதுவரை சாய்ந்தமருதுக்கு கிடைக்கவில்லை. சாய்ந்தமருதைச் சேர்ந்த தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர் சலீமும் அதாவுல்லாவுடன் இணைந்து சாய்ந்தமருது நகர சபை கோஷத்தை முன்வைத்து வாக்குகளைப் பெற்று ஏமாற்றி வருகின்றார். இதுவொரு ஆரோக்கியமான செயற்பாடல்ல.

ஒருபோதும் அதாவுல்லாவினால் நகர சபையைப் பெற்றுத் தர முடியாது. அவருக்கு அரசாங்கத்தில் பலம் இல்லாமை என்பது வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டவுடனேயே அறிய முடிந்தது. 2022 பெப்ரவரி மாதத்துக்கு இடையில் அதாவுல்லாவும் சலீமும் நகர சபையைப் பெற்றுத் தர வேண்டும்.

இல்லையேல் தங்களால் முடியாது என மக்கள் முன்னிலையில் பகிரங்கமாகக் கூறி ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இன்னும் இன்னும் சாய்ந்தமருது மக்களை ஏமாற்ற முனையக் கூடாது என தெரிவித்துள்ளார்.

Related posts

ரணிலின் பொறியில் சிக்கிய எலி

wpengine

பொதுபல சேனா பிரதமரின் கூட்டு உருவாக்கம்! ஏன் அளுத்கமைக்கு நஷ்டஈடு கிடைக்கவில்லை

wpengine

எம்.எச்.முஹம்மத் மறைவுக்கு மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்தின் பழைய மாணவர் சங்கத்தின் அனுதாபச் செய்தி

wpengine