Breaking
Fri. Apr 19th, 2024

நேற்று வரை தேசீய நீரோட்டத்தில்தான் நீச்சலடிப்பேன் என்று ‘மச்சான்ஸ் புகழ்’ நமீதா அடம்பிடித்தார். ‘நமீதா மட்டும் சட்டமன்ற தேர்தலில் பி.ஜே.பி-க்கு ஆதரவா பிரசாரத்துல இறங்கினா,  தமிழ்நாட்டுல ஒவ்வொரு ஊர்லயும் கூட்டம் தாங்காது’ என்று காவிக் கட்சியிடம், கவர்ச்சி நமீதா தனக்கு வேண்டியவரை வைத்து பேசவைத்தார்.

‘பணம் எதுவும் தரமுடியாது. ஏதாவது ஒரு பதவி தருகிறோம்’ என்று சொல்ல, பி.ஜே.பி.க்கு குட்பை சொல்லி விட்டார் நமீதா. அடுத்து காங்கிரஸுக்கு போகலாமா? என்கிற யோசனையில் தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  ‘ஏற்கெனவே அங்கே இருக்கும் குஷ்புவுக்கும், நக்மாவுக்கும் நடக்கும் ஈகோ சண்டையில நீங்க காணாம போயிடுவீங்க’ என்று கூற அந்த திட்டமும் கைவிடப்பட்டது.

அ.தி.மு.க  சட்டமன்ற தேர்தலுக்காக ரூ.2,500 கோடியை இறக்கி இருக்கிறார்கள். அங்கேபோய் தேர்தல் பிரசாரம் செய்தால் நிச்சயமாக பெருந்தொகையும் கிடைக்கும் என்று அ.தி.மு.க முக்கியப்புள்ளி ஒருவர் ஆலோசனைத் தர, உடனே  ஜெயலலிதாவுக்கு கடிதம் தயாரானது.

“நமீதாவாகிய நான் தமிழ் சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறேன். தங்களின் சீர் மிகுந்த நிர்வாகமும், ஆட்சி முறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாக உயர வைத்துள்ளது. சிறந்த தலைவியாக விளங்கும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பை தர விரும்புகிறேன். தங்கள் தலைமையில் அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராக என்னை சேர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ” என்று கடிதம் கொடுத்திருந்தார் நமீதா.name1

இந்நிலையில் இன்று திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரசார பொதுக்கூட்டத்தில், ஜெயலலிதா முன்னிலையில் நமீதா தன்னை அக்கட்சியில் இணைத்துக்கொண்டார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *