Breaking
Sun. Nov 24th, 2024

பாரதூரமான சுற்றாடல் அழிவினை ஏற்படுத்தி நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இடம்பெறும் சட்டவிரோத அகழ்வுகளை சுற்றிவளைப்பதற்கு பொலிஸ் மா அதிபரின் கீழ் விஷேட பொலிஸ் குழுவினரை ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கினார். புவிச்சரிதவியல் மற்றும் அகழ்வு பணியகத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று முன் தினம் (06) முற்பகல் கொழும்பு, புவிச்சரிதவியல் மற்றும் அகழ்வு பணியகத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போதே ஜனாதிபதி  இப்பணிப்புரையினை வழங்கினார். கடல் சம்பந்தப்பட்ட அனைத்து வளங்களினதும் உரிமை தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்வதற்கு அதிகாரம் பெற்ற ஒரு நிறுவனத்தை ஸ்தாபித்தல் தொடர்பாக இங்கு கவனம் செலுத்தப்பட்டது. நாடுபூராக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத அகழ்வுகள் தொடர்பில் தராதரம் பாராது சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியதுடன், இந்நடவடிக்கைகளை உரிய முறையில் அமுல்படுத்துவது தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.13125002_10154033859776327_7365650480064427437_n

மேலும், அபிவிருத்திக் கருத்திட்டங்களை தாமதமின்றி முன்னெடுத்துச் செல்வதற்காக புவிச்சரிதவியல் மற்றும் அகழ்வு பணியகத்தின் உதவியினை தாமதமின்றி வழங்கும் தேவையை ஜனாதிபதி  இதன்போது உத்தியோகத்தர்களிடம் சுட்டிக்காட்டினார். புவிச்சரிதவியல் மற்றும் அகழ்வு பணியகத்தின் தலைவர் கித்சிறி திசாநாயக்க, பதில் பணிப்பாளர்  நாயகம் சஜ்ஜன த சில்வா உள்ளிட்ட மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் உயர் அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.13124626_10154033862106327_1466808051312338997_n

இதன்போது, “பூமி தொடர்பாக நியதிச்சட்ட உரிமையைக் கெண்டுள்ள புவிச்சரிதவியல் மற்றும் அகழ்வு பணியகத்திற்கு பூமியை மற்றும் இயற்கையை பாதுகாக்கும் பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது” என ஜனாதிபதி தெரிவித்தார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *