கட்டாய விடுமுறை வழங்கப்பட்ட குருநாகல் வைத்தியசாலையில் பணிபுரிந்த மகப்பேறு மருத்துவர் டொக்டர் ஷாபி சியாப்தீனுக்கு சம்பள நிலுவையை வழங்க சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எசட்.முணசிங்க அறிவுறுத்தியுள்ளார்.
குருணாகலை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் எஸ்.எசட்.முணசிங்க கடந்த 06 ஆம் திகதி எழுத்து மூலம் இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள வைத்தியர் ஷாபிக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படாமைக்கான காரணத்தையும் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், வைத்தியர் ஷாபி மீண்டும் பணியில் அமர்த்தப்படவில்லை என சுகாதார அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
டொக்டர் ஷாபி சியாப்தீனை 2019 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி முதல் கட்டாய விடுமுறையில் அனுப்ப சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.